மே மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

மே மாத ராசி பலன்கள் 2024 - சிம்மம்

ஆற்றலும், வலிமையும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு தனஸ்தனாத்தை பார்வையிடும் குருவால் உங்களின் பொருளாதார சூழ்நிலைகள் மாறும். தேவைகளுக்கு ஏற்ப பண வரவு வந்து சேரும். நினைத்ததை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். கண்டக சனி காலம் என்பதால்... உங்களின் உடல் நலனின் கவனம் செலுத்த வேண்டிவரும். தேடி சென்று உறவுகளை புதுப்பித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகளை அடைவீர்கள். 
 
புதிய திட்டம் செயல்படுத்துவதில் உங்களின் முயற்சிகளில் நற்பலன் உண்டாகும். முக்கிய நிகழ்வுகளில் பங்குபற்றுவீர்கள். அரசியலிலும், பொது வாழ்விலும் உங்களின் செயல்பாடுகள் பாராட்டு படியாக அமையும். எதற்கும் துணிந்து செயல்களை தொடர்ந்து செயல்படுவீர்கள். செய்யும் தொழிலில் முதலீடுகளை நிதானித்து செய்வது நல்லது.
 
உங்களின் உத்தியோக நிலை.. உயர்ந்த இடத்திலிருந்து பார்க்கும் நிலை உண்டாகும். தான தர்மங்களில் அதிக நாட்டம் உண்டாகும். ஆன்மீக செயல்களில் ஈடுபாடு கொள்வீர்கள். உங்களின் ராசிநாதன் உச்சம் பெறுவதால் எந்த இடத்திலும் உங்களுக்கு மரியாதை சிறப்பாக அமையும். வாழ்வில் இதுவரை நடந்த கசப்பான நிகழ்வுகள் இனி வவராமல் பல காரியங்கள் மேன்மையை தரும்.
 
காரியத்தை செயல்படுத்துவதில் இருந்த சிக்கல்  அகலும். குறைந்த முதலீடுகளில் செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தங்க நகை வியாபாரிகளுக்கு கூடுதல் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு நல்ல வருமானம் கிடைக்கும். விவசாயத்தில் சிலருக்கு கூடுதல் விளைச்சல் உண்டாகி வருமானம் பெருகும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
04-05-2024 சனி பகல் 02.12 முதல் 06.05.2024 திங்கள் மாலை 04.39 மணி வரை.
 
31-05-2024 வெள்ளி இரவு 10.26 முதல் 02-06-2024 ஞாயிறு இரவு 12.51 மணி வரையும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
சிவப்பு, மஞ்சள், வெண்மை.

அதிர்ஷ்ட திசைகள்:
 
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
ஞாயிறு, திங்கள், வியாழன்.
 
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து காரியங்களும் வெற்றி தரும்.